இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அறிவித்தல்

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அறிவித்தல்
  • :

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

கைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் ஒரு பொதியைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து, இணையவழிப் பணப்பரிவர்த்தனை முறையில் வங்கி அட்டை (Debit/Credit Card) மூலம் குறித்த தொகையைச் செலுத்துமாறு அவர்களை இலக்கு வைத்து ஒரு Phishing scam (மோசடி) மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ை

மேலும், இந்த மோசடியான குறுஞ்செய்தி இணைப்புகள் (SMS Link), போலி இணையதளங்கள் மற்றும் இணையவழிப் பணப்பரிவர்த்தனைக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், அறியப்படாத இணைப்புகளைச் (links) சொடுக்க (click) வேண்டாம் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் தங்களது வங்கி அட்டை விவரங்கள் அல்லது ஓடிபி (OTP) எண்களை மூன்றாம் தரப்பு நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ வழங்க வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles