சமாதான நீதவான் முறைமை ஒருபோதும் அரசியல்மயமாக்கப்படாது என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நேற்று (24) நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் 40 புதிய சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய சமாதான நீதவான்கள் 40 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானயக்கார தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இடம்பெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சமூக சேவை மற்றும் கல்வித் தகைமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 114 புதிய சமாதான நீதவான்களை நியமிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் 40 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமாதான நீதவான் பதவியைப் பெறுவதற்கு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்திருப்பது கட்டாயத் தகுதியாகும், மேலும் நிர்வாக மாவட்ட மட்டத்தில் மூன்று ஆண்டு காலத்திற்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொருந்தும் பதவியைப் பெறுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்குள் சிறப்பாகச் செயல்படுவது அவசியமாகும்.
சமாதான நீதவான் பதவியை வகிக்கும் காலத்தில் நிர்வாக மாவட்டத்தைப் பாதிக்கும் வகையில் பதவிக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடும் சமாதான நீதவான்களின் பதவியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


