சர்வதேச சந்தையில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் தொடர்புகளுடன் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்

சர்வதேச சந்தையில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் தொடர்புகளுடன் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்
  • :
 
புதிய மற்றும் வருங்கால ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச சந்தையில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் தொடர்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருதி சபை (EDB) அண்மையில் கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு வலையமைப்பு செயலமர்வை (Networking Session) நடத்தியது.

 ஏற்றுமதி வணிகத்தில் நுழையத் தயாராக உள்ள ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த அமர்வில் பங்கேற்றனர், அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் ஏற்றுமதி வணிகங்களுக்குத் தேவையான பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்பது, ஏற்றுமதி சந்தைகள் குறித்த அறிவை மேம்படுத்தல், சர்வதேச வணிகங்களில் நம்பிக்கையை வளர்ப்பது, பயனுள்ள தகவல் தொடர்பு உத்திகள் மற்றும் உலகளாவிய தரத் தரங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளை இந்த அமர்வு உள்ளடக்கியது.

Related Articles