சீன வர்த்தக சபை இலங்கையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது

சீன வர்த்தக சபை இலங்கையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
  • :
சீன வர்த்தக சபை, நாட்டில் பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான பால் பண்ணைகள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

 சீன வர்த்தக சபையின் பிரதிநிதிகள் குழு அண்மையில் கமநல கேந்திர நிலையத்தில் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவை சந்தித்தபோது இது வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே பல முக்கிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.
சீன வர்த்தக சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்தது.
 
இங்கு, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு குறிப்பிட்ட முன்மொழிவை சீன வர்த்தக சபை சமர்ப்பித்தது, இது விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த விடம் வழங்கப்பட்டது. அமைச்சர் லால்காந்தாவிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் அதை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

Related Articles