சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங் (Qi Zhenghong) தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.
இதன் போது உரையாற்றிய சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங் (Qi Zhenghong);
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை அன்பளிப்பு செய்வதற்காக நாம் இன்று மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு வந்துள்ளோம். இந்த ஒவ்வொரு பொதியிலும் 6500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகள் உள்ளன. எமது உதவியுடன் நீங்கள் இந்த சவாலை வெற்றி கொண்டு சாதாரண மக்கள் வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதற்கு முடியும் என நாம் எதிர்பார்ப்பு பார்க்கின்றோம் என தெரிவித்தார்.