ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான அலுவலர் குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே நேற்று (30.12.2024)நடைபெற்ற அமைச்சரவையில் அனுமதி வளங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உச்ச சேவையைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.