மழை நிலைமை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானதுவடகிழக்கு திசையிலிருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம்,காங்கேசந்துறை, திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டைவரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல்நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டைவரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.