சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
  • :

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் பொது ஒழுங்குகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பானதும் அமைதியானதுமான சூழலை உருவாக்கும் நோக்கில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது முப்படைகள், இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவார்கள்.

புத்தாண்டு காலம் முழுவதும் நாடளாவ ரீதியில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதே இந்த நடவடிக்கயின்நோக்கமாகும்.

அத்துடன், கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் ஒரு விசேட செயற்பாட்டு அறையும் நிறுவப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் மற்றும் முப்படையினரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்பாட்டு அறை, பண்டிகைக் காலத்தின் முக்கிய ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும்.

Telephone Numbers - 011- 2013051 / 011- 2027148 / 011- 2027149 / 011- 2430912
Email Address - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையில் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நேரடி தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படக்கூடிய ஏதேனும் அவசர அல்லது பாதுகாப்பு நிலைமைகளுக்கு விரைவான பதிலளிப்பை உறுதிசெய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்த மையம் உதவும்.

அனைவருக்கும் அமைதியானதும் பாதுகாப்பானதுமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை உறுதிசெய்யும் பொருட்டு, பாதுகாப்பு படைகளுக்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

Related Articles