சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அதெனியி (Kunle Adeniyi) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பங்களிப்புடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வைப் பெற்று ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் இந் நாட்டில் இலவச சுகாதார சேவையை மேலும் முன்னேற்றுவதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளது.