நாட்டின் வினைத்திறனான சுகாதார சேவையின் மூலம் நோயுற்ற மக்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கும் சுகாதார நிபுணர்களை தற்போது பாதிக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதும், அவர்களுக்கு தேவையான சிறந்த தொழில்சார் சூழலை உருவாக்குவதும் சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதன் விளைவாக, நிபுணர்கள் தங்கள் தொழில்சார் வாழ்க்கையின் திருப்தி அடைவார்கள், இதன்மூலம் அவர்களிடம் இருந்து திறமையான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
அரசாங்க மருந்து கலவையாளர் சங்க அதிகாரிகள் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
அரசாங்க மருந்து கலவையாளர் சங்க அதிகாரிகள் அவர்களின் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் சேவைகளை மேற்கொள்வதில் பல மனிதவலு மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பிரச்சினைகள், அத்துடன் துறை சார் விடயங்களில் சிறந்து விளங்குவதற்காக தரங்களைப் பேணுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.
தொழிற்சங்க பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் மிகவும் நியாயமானவை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான மற்றும் நியாயமான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறினார்.
சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து நிபுணர்களும் நல்ல புரிதலுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள் என்றும், அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலமும், பரஸ்பர புரிதலுடன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


