இந்தக் கல்வி கல்லூரியில் முதலாவது மாணவர்களாக இன்று உங்களுக்கு காணப்படும் மற்றும் உங்களின் பெற்றோர்களுக்கு காணப்படும் ஆறுதல் எதிர்காலத்தில் இந்த கல்வி கல்லூரிக்கு வருகை தரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கும் உரிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ தெரிவித்தார்.
குளியாப்பிட்டியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தொழில்நுட்ப தேசிய கல்விக் கல்லூரியில் முதல் தொகுதி புலமை பரிசில் பெற்ற மாணவக் குழுவைப் பதிவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செயலாளர் இதனை குறிப்பிட்டார்.
கல்விக் கல்லூரியை நிருமாணிக்கம் செயற்பாட்டிற்காக கொரிய அரசாங்கத்தினால் (KOICA) 2,898 மில்லியன் அமெரிக்க டாலர்களும் இலங்கை அரசாங்கத்தினால் 1,112 மில்லியன் அமெரிக்க டாலர்களும் ஒதுக்கப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்தச் செலவு இதன்படி 3,510 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த செயலாளர்,
நான் எனது உரையில் எது தொடர்பாக தெரிவித்தேன் என உங்களுக்குத் தெரியும். விசேடமாக பகிடிவதை போன்றவை தான். தற்போது கல்வித்துறையில் பகிடிவதையை இல்லாதொழிக்கும் செயற்பாடு பெருமளவில் வெற்றி அளித்துள்ளது.
பல்கலைக்கழகங்களிலும் மிகவும் குறைந்த மட்டத்தில் தான் இது தற்போது இடம்பெறுகிறது. இந்த நிறுவனம் மிகவும் விசேடமானது. ஏனென்றால் உங்களால் நிர்மாணிக்கப்படும் கலாச்சாரம் தான் எதிர்காலத்தில் வரும் உங்கள் சகோதர சகோதரிகளிடையே பரவிச் செல்லும். இன்று இந்த இடத்திற்கு வருகை தந்துள்ள உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் மனதில் ஆறுதல் காணப்படும். அந்த ஆறுதலை எதிர்காலத்தில் இங்கு வருகின்றவர்களுக்கும் வழங்குவதற்கான அடித்தளத்தை இடுவதற்கு உங்களால் முடியும்.
அவ்வாறே கல்வி நடவடிக்கைகளில் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதும் உத்தியோபூர்வமாக நிறுவனத்தை திறந்து வைக்கும் செயற்பாடு பிரதமர் மற்றும் கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பொருத்தமான தினத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.