இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  300/400 கிராம் Frozen Fish பொதிகள்.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  300/400 கிராம் Frozen Fish பொதிகள்.
  • :

கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம்  04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுகர்வோருக்கு தொடர்ச்சியாக நியாயமான விலையில் புதிய மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நீர்கொழும்பு கம்பஹா பிரதேச முகாமையாளர் மற்றும் ஊழியர்களினால் வழிநடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் விஷேட குலுக்கல் சீட்டிழுப்பும் நடத்தப்பட்டு பெறுமதியான பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. ஜே.ஏ.கே. மார்க் அவர்கள், எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் 21இல் ஆரம்பகட்ட திட்டமாக 300-400 கிராம் அளவிலான சிறிய Frozen Fish பொதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அந்த சிறிய அளவிலான பொதிகளை எவரும் தமது கையடக்கப் பையில் கூட இலகுவாக எடுத்துச் செல்ல முடியும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]