இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை
  • :

2025 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

2025 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல், மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை ​வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில், காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையை அண்மித்த அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் இருக்கும். இதன் காரணமாக, இன்று (07) பிற்பகல் 12:12 மணிக்கு கொழும்பு, அவிஸ்ஸாவல்ல, தலவாக்கலை, திம்புல, கலகும்புர மற்றும் தம்பகல்ல ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் .

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]