நேற்று (31) நள்ளிரவு 12 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை டீசல் ஒரு லீட்டர் 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283.00 ரூபாய்.
ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 299.00 ரூபாய்.
ஒக்டேன் 95 ஐந்து பெற்றோல் மற்றும் இலங்கை மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
31.08.2025ஆம் திகதி நள்ளிரவு 12 மணியிலிருந்து சிபெட்கோ எரிபொருள் சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் அமலுக்கு வரும் வகையில் சிபட்கோ எரிபொருள் புதிய சில்லறை விலை பின்வருமாறு;
லங்கா வெள்ளை டீசல் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283.00 ரூபாய்
லங்கா சுபிரி டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீட்டர் ஒன்றுக்கு 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் தற்போதைய விலை 313.00 ரூபாய்கள்
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டர் ஒன்று ஆறு ரூபாயினால் குறைக்கப்பட்டு தற்போதைய அதன் விலை 299.00 ரூபாய்களாகும்.
இதேவேளை லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றுக்கு 341.00 ரூபாவாகவும், லங்கா மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 185.00 என மாற்றம் இன்று காணப்படும்.
என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமது ஊடக அறிவித்தலில் தெரிவித்துள்ளது.


