திட்வா சூறாவளியால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி (12) ஹக்கல தாவரவியல் பூங்காவை ஆய்வு செய்தார்.
நிலச்சரிவு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலத்தை உறுதிப்படுத்த குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை எடுத்து ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் ஆரம்பிக்க சுற்றாடல் பிரதி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை வழங்கினார்.
அதன்படி, ஹக்கல தாவரவியல் பூங்கா விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கே. பண்டார, நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் புத்திக மற்றும் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.


