இளைஞர் விருத்தி குறித்த முதல் தேசிய ஆய்வுக் கருத்தரங்கு - 2026
ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்புகள் தற்போது கோரப்பட்டுள்ளன
இலங்கை இளைஞர்களின் ஆற்றலைக் கண்டறிந்து, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்க வழிவகை செய்யும் நோக்கத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் இணைந்து இளைஞர் விருத்தி குறித்த முதல் தேசிய ஆய்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
அதன்படி, ஆய்வு முன்மொழிவுகள் மே 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.
இங்கு, ஒன்பது முக்கிய ஆய்வுத் துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் கோரப்படுகின்றன.
01. இளைஞர் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம்.
02. கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு
03. உடல்நலம், மனநலம் மற்றும் ஊட்டச்சத்து
04. இளைஞர் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு
05. தொழில்நுட்பம், டிஜிடல் மயமாக்கல் மற்றும் புத்தாக்கம்
06. காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி
07. சமூகப் பங்கேற்பு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி
08. இளைஞர் இடம்பெயர்வு மற்றும் சர்வதேச உறவுகள்
09. கலை, கலாச்சாரம் மற்றும் படைப்பாக்க வெளிப்பாடு
பல்கலைக்கழக மாணவர்கள், சுயாதீன ஆய்வாளர்கள், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இளைஞர் விருத்தியில் ஆர்வமுள்ள எவரும் இதில் பங்களிக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு..
மின்னஞ்சல் -
தொலைபேசி - 011 - 2881082/083
வாட்ஸ்அப் - 076 4769519
முகவரி - மாநாட்டுச் செயலர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


