முன்னர் வேறொரு கைபேசி எண்ணில் பதிவுசெய்யப்பட்ட வாகன எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் (2026 மார்ச் 14 க்கு ) பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்தின் QR குறியீட்டைப் மீண்டும் பெறும்ேோது, பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட கைபேசி எண் பயன்பாட்டில் இல்லாததாலோ அல்லது வேறொருவருக்குச் சொந்தமானதாக இருப்பதாலோ, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் இல்லாெொழிப்பதற்கு, இன்று (மார்ச் 19) முதல் இந்த அமைப்பில் ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் மூலம், அந்தத் தடைகள் நீக்கப்பட்டு, எரிபொருள் ஊ குறியீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு எளிதாக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
• உங்கள் வாகனத்தின் அடையாளத்தைச் உறுதி ெெய்ய, வாகன எண் மற்றும் ெெஸி எண்ணைச் சரியாக உள்ளிடுவதன் மூலம் மட்டுமே இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.
• வாகனம் ஏற்கனவே வேறொரு கைபேசி எண்ணின் கீழ் வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு 2026 மார்ச் 14 க்கு முன்னர் செய்யப்பட்டிருக்க வேண்டும்), சரியான தகவல்களை உள்ளிட்டு, தற்போதுள்ள பதிவை இரத்து செய்து, உங்கள் புதிய கைபேசி எண்ணின் கீழ் மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.
• நீங்கள் (Override) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடன் ஒரு புதிய கணக்கு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.
இந்தச் செயல்பாட்டின்ேோது, வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்கான தற்போதைய பதிவு இரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனாளி அந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளையும் அணுகலையும் இழப்பார். மேலும், நீண்ட காலமாக மற்ற தரப்பினருக்குச் சொந்தமாக இல்லாத அல்லது பயன்படுத்தப்படாத தொலைபேசி எண்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு, இந்த வசதியானது அதன் உண்மையான உரிமையாளர் எந்தத் தடையுமின்றி QR குறியீட்டைப் பெற உதவும்.
எச்சரிக்கை: வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்தின் தரவை, அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வ உரிமை இல்லாமல் மற்றொரு நபர் நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தனக்கு சட்டரீதியான உரிமை இல்லாத ஒருவர், எரிபொருள் QR குறியீடுகளுக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்தின் தரைை நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


