இளம் வைத்தியர்களுக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை பட்டப்பின்படிப்பிற்கு பயிற்சி வழங்குவதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது 

இளம் வைத்தியர்களுக்கு நரம்பியல் சத்திர சிகிச்சை பட்டப்பின்படிப்பிற்கு பயிற்சி வழங்குவதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது 
  • :

நரம்பியல் சத்திர சிகிச்சை மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பட்டப்பன் பின் படிப்பு பயிற்சிக்காக இளம் வைத்தியர்களை அதிக அளவில் ஊக்கப்படுத்துவதற்காக அவசியமான விடயங்கள் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் பூரண கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும்,  அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் மற்றும் வளங்களை அமைச்சு தொடர்ந்தும் வழங்கும் என சுகாதார மற்றும்  ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு நவலோக வைத்தியசாலையின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இலங்கை நிரம்பியல் சிகிச்சை  வைத்தியர்கள் சங்கத்தின் நான்காவது வருடாந்த ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

இவ்வருட ஆய்வு மாநாட்டிற்கான ஒத்துழைப்பை பிரித்தானிய நரம்பியல் சிகிச்சை வைத்தியர்களின் சங்கம் மற்றும் இந்தியாவின்  நரம்பியல் விஞ்ஞான சங்கம் ஆகியன இணைந்து வழங்கின.

அறுவை சிகிச்சை அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு நரம்பியல் சிகிச்சை வைத்திய முறையை முன்னேற்றுதல் (Neurology Unleashed - Carving Pathways, Crafting Miracle) எனும் தொனிப்பொருளில் இம்முறை ஆய்வு மாநாடு இடம் பெற்றது.

நாட்டு மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான மருத்துவ சேவைகளை வழங்கும் போது நரம்பியல் வைத்தியர்கள் வழங்கும் விசேட பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும், தற்போது அரசாங்க மற்றும் தனியார் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நரம்பியல் நோய்கள் சம்பந்தமாக சிகிச்சை சேவைகள் வழங்கப்படுவதாகவும், நரம்பியல் வைத்தியர்கள் 27 பேர் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த வைத்தியர்களின் சேவை விஷேட மதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

நரம்பியல் சிகிச்சை பிரிவில் அர்ப்பணிப்புடனான முன்னேற்றத்தை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்வதற்கு நாட்டுமக்களுக்காக உயர்தரத்திலான நரம்பியல் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு அவசியமான எதிர்கால திட்டங்களை தயாரிப்பதாகத் தெரிவித்த அமைச்சர், நரம்பியல் வைத்தியர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சின் ஊடாக விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நரம்பியல் சிகிச்சை சேவைகளை எதிர்காலத்தில் முன்னேற்றுவதற்காக சுகாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும்  அமைச்சர் தெளிவு படுத்தினார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் அதிக நிதி ஒதுக்கப்பட்டமை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தான் என்றும், அதிக சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒதுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கையின் நரம்பியல் வைத்திய விஞ்ஞானத்தினை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிற்சங்கம் ஒன்றாக இலங்கையின் நரம்பியல் மருத்துவ சிகிச்சை வைத்தியர்களின் சங்கத்தை குறிப்பிட்டுக் கூற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

அவ்வாறே நரம்பியல் விசேட  நிபுணர்களின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை முன்னேற்றுவதற்கும், துறை சார்ந்த அறிவைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு இவ்வாறான வருடாந்த அமர்வுகள் ஏதுவாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் இலங்கை நரம்பியல் சிகிச்சை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் புன்சித் குணவர்தன, செயலாளர் விசாரணை வைத்தியர் பாஸ்கி பெரேரா, இந்தியாவின் நரம்பியல் விஞ்ஞான  சங்கத்தினை பிரதி நிதித்துவப்படுத்திய பேராசிரியர் மானஸ் பாணி கிரகி, பிரித்தானிய நரம்பியல் சிகிச்சை வைத்தியர்கள் சங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் பீட்டர் ஹவன்சன் போன்ற பலர் நரம்பியல் வைத்தியர்கள் விசேட வைத்தியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]