ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும், சுற்றுச்சூழல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் வறண்ட மண்டல காலநிலை மாற்றங்களுக்கு ஆளாகும் சமூகங்களின் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் மாவட்ட செயற்பாட்டுக் குழுவின் முதல் அமர்வு கடந்த (21) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் 06 மாவட்டங்களில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செவனகல, கதிர்காமம், தனமல்வில ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.