இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல நியமனம்

  • :

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் (CAASL) புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கெப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் அனுமதிய​ைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடிதுவக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இன்று கெப்டன் தமிந்த ரம்புக்வெல்லவுக்கு தொடர்புடைய நியமனக் கடிதத்தை கையளித்தார்.

 விமானப் போக்குவரத்துத் சேவையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் நாட்டிற்கும் சிவில் விமானப் போக்குவரத்துக்கும் சிறந்த சேவையை வழங்கிய விமானப் போக்குவரத்து நிபுணரான கெப்டன் ரம்புக்வெல்ல, விமானப் பாதுகாப்பு, விமானச் செயல்பாடுகள், விமானத் தகுதி, பணியாளர்கள் மற்றும் உரிமம், விபத்து விசாரணைகள், பாதுகாப்பு அமைப்புகள், சட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் போன்றவற்றில் விரிவான அறிவைக் கொண்டுள்ளார்.

 

 

Related Articles