பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை 

பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை 
  • :

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 193 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட முகாமையாளர்  திலக் விஷ்வகுலதிலகவின் தலைமையில் அண்மையில் (07) அம்பாறை ஹார்ட் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 59 குழந்தைகளுக்கு தலா ரூ. 25,000 வீதமும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 74 குழந்தைகளுக்கு தலா ரூ. 30,000 வீதமும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 60 குழந்தைகளுக்கு தலா ரூ. 40,000 வீதமும் என்ற அடிப்படையில்  ரூ. 6,095,000 மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப்பட்டது.

Related Articles