இலங்கை மற்றும் இந்தியா விற்கிடையே உயர் கல்வி ஒத்துழைப்புத் தொடர்பாக நீண்ட வரலாறு காணப்படுவதாக உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற “பாரத் - இலங்கை பல்கலைக்கழக மாநாடு (Bharat Sri Lanka Higher Education Summit)” நேற்று (28) கொழும்பில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்திய பல்கலைக்கழக சங்கம் (AIU) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் இந்திய இலங்கை பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் கல்வி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உயர் கல்வித் துறையில் புதிய பரிமாணங்கள் மற்றும் இரு நாடுகளின் உயர் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய உயிர் கல்வி பிரதி அமைச்சர்; இலங்கை மற்றும் இந்தியா கடந்த காலங்களில் இருந்தே சகல துறைகளிலும் கல்வியறிவு பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், கடந்த காலங்களில் நாலந்தா மற்றும் அனுராதபுரத்திற்கு இடையே காணப்பட்ட அறிவை பரிமாறிக் கொள்வதில் காணப்பட்ட முறைமைகள் இதற்கு சாட்சி அளிக்கின்றன.
அதன்படி இந்தியா மற்றும் இலங்கை இடையே உயர்கல்வி ஒத்துழைப்பிற்கு மிகவும் நீண்ட வரலாறு காணப்படுவதாகவும் உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்ட அவர், இம்மாநாடு அந்த வரலாற்று மரபை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு மைல் கல்லாகும் என சுட்டிக்காட்டினார் .