இலங்கை பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் சுட்டிகளில் உயர்த்தி வைத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்தலுக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அதன்படி,
- கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சித்திட்டங்களை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மாநாடுகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரஸ்பரம் அக்கறை கொண்டுள்ள துறைகளில் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதலை நோக்கமாக கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வூஹான் விளையாட்டு பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- உயர் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு தரப்புக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உயர் கல்வி விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், கல்வி ஆளணியினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை பரிமாற்றம் செய்தல், ஒன்றிணைந்த ஆராய்ச்சி செயற்பாடுகளை மேம்படுத்துதலை குறிக்கோளாகக் கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஐசூ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- ஒன்றிணைந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துதல், மாணவ மற்றும் கல்வி ஆளணி பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், ஒன்றிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்துதல், வெளியீடுகளை பரிமாற்றம் செய்தலை குறிக்கோளாக கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே எக்டர் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- பரஸ்பரம் பலன் கிடைக்கும் குறுங்கால பயிற்சி பாடநெறிகள் மற்றும் கருத்திட்டங்களை அடையாளம் காணும் குறிக்கோளுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலிய டீகின் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- பரஸ்பர தேவைகள் மற்றும் பலன்களை அடிப்படையாக கொண்டு, பட்டப்பின் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் குறிக்கோளுடன் மாநாடுகள் மற்றும் கல்விசார் கூட்டங்களில் பங்குபற்றுதல், கல்வி தகவல்கள் மற்றும் ஏனைய தகவல்களை பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சீன லீன்யீ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- ஆராய்ச்சி மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான கற்பித்தல், கற்றல் பொருட்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய இலக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்தல், பரஸ்பரம் அக்கறை கொண்டுள்ள துறைகளில் குறுங்கால தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், மாநாடுகள் அல்லது பயிற்சிப்பட்டறைகளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதனை குறிக்கோளாக கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மஹாத்மா காந்தி மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- முதலாவது பட்டம், முதுமாணி பட்டம் மற்றும் கலாநிதி பட்டம் உள்ளிட்ட ஒன்றிணைந்த ஆராய்ச்சி மேற்பார்வை, கற்பித்தல், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கம் ஆகிய ஒத்துழைக்கக்கூடிய துறைகளில் வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு மாணவ, கல்வி ஆளணி மற்றும் ஆராய்ச்சியாளர்களை பரிமாற்றம் செய்வதற்கு வசதி செய்தல், நன்நடத்தை விரிவுரையாளர்களுக்கு சேவை ஆரம்ப பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சீன n~ன்டோன்க் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- ஆராய்ச்சி ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பீடங்களின் கல்வி ஆளணியினர் மற்றும் மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், கிளினிக் அனுபவம், உசாத்துணை மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை மேம்படுத்துதலை குறிக்கோளாக கொண்டு களனிய பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஹொட்லன்ட்டின் நியூயோர்க் அரச பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- பட்டப்படிப்பு மற்றும் முதுமாணி பட்ட பாடநெறி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுதலை குறிக்கோளாக கொண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலிய ரோயல் மெல்பெர்ன் தொழில்நுட்ப நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- கல்வி மற்றும் ஒன்றிணைந்த ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் ஒன்றிணைந்த பயிற்சிப்பட்டறைகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்தலை குறிக்கோளாக கொண்டு களனி பல்கலைக்கழகம் மற்றும் கொரிய குடியரசின் தேசிய கொரிய சமுத்திரவியல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஆகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு இவ்வமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.