'க்ளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இலங்கை நீதிமன்ற முறையை டிஜிட்டல் மயப்படுத்தும் e- court கருத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு ரூ. 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி
இலங்கை நீதிமன்ற முறைமையை டிஜிட்டல்மயப்படுத்தல் தேசிய முன்னுரிமை மூலோபாயத் திட்டமாக அரசு அடையாளங் கண்டுள்ளது. குறித்த டிஜிட்டல் நிலையுருமாற்றச் செயன்முறையில் ஆரம்ப கட்டமாக தற்போது உயர்நீதிமன்றத்தின் வழக்குக் கோவை முகாமைத்துவத்திற்காக இணையத்தளமொன்றும், அதனுடன் இணைந்த இலத்திரனியல் முறைமை (e-CMS) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
உயர் நீதிமன்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வலையமைப்பு இணையத்தளமொன்று e- CMS முறைமை மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, நீதிபதிகளின் நிறுவனம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இசைவாக்கம் செய்து கொள்வதற்கு ‘e- Court’ கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்மூலம், நீண்டகாலமாக எமது நாட்டின் நீதிமன்றங்கள் முகங்கொடுக்கின்ற வழக்கு தாமதங்கள் மற்றும் தரவு வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் நீதிக்கான அணுகலுக்கு தடை ஏற்படல், வினைத்திறன் இன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.


