இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்

இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்
  • :
 
இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு இன்று (29) வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது

 இதன்போது ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், புலமைச் சொத்து உப பிரதிநிதி ( சட்டபூர்வமற்ற) பதிவு செய்தல், புவியியல் குறியீடு பதிவு , வர்த்தக முத்திரைகள், உரிமங்கள், தொழில்துறை திட்டங்களைப் பதிவு செய்துல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்காக, வெளியீட்டு உரிமை தொடர்பாக செயல்படுவதற்கு வேறு பிரிவொன்றை அமைத்தல், காப்புரிமை தாக்கல்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன் வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்துதல், நிகழ் நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் தகவலைப் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளைத் திட்டமிடுதல், ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தை முடிவுறுத்துதல், புலமைச் சொத்துகளின் உப பிரதிநிதி , காப்புரிமை உப பிரதிநிதி (சட்டரீதியற்ற) தரவுக் கட்டமைப்பை உருவாக்குதல் என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே ஏ விமலேந்திர ராஜா, உட்பட அமைச்சின் அதிகாரிகள், தேசிய புலமைச் சொத்து செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி ஹெட்டிஹழகே உட்பட நிறைவேற்று அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles