இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கிஹாந்த சில்வா இன்று (26) தனது கடமைகளை பொறுப்பேற்றார் .
இவர், இலங்கையில் பல்வகை வர்த்தக நிறுவன சந்தைப்படுத்தலில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு சிறந்த வர்த்தக நிபுணராவார்.
மேலும், சந்தைப்படுத்தல், மூலோபாய திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானமுதுமானிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.