இன்று காலை UL 403 என்ற விமானத்தில் பேங்கொக்கில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மூன்று பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், இந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த இருபது இலட்சமாவது சுற்றுலாப் பயணி ஆவார்.
இருபது இலட்சமாவது சுற்றுலா பயணியை வரவேற்பதற்காக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஆண்டொன்றிற்கு 20 இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும்.