இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 40ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட முதல் நாள் உறை வெளியீடு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 40ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட முதல் நாள் உறை வெளியீடு
  • :
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட முதல் நாள் உறை இன்று (27) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அதன் அமைச்சில் இடம்பெற்றது.

 இப்பணியகம் 40 வருட காலமாக இலங்கையில் புலம் பெயர் சமூகத்திற்கு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் பாரிய அளவிலான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அந்நியச் செலாவணியை வழங்குதல், இலங்கை புலம்பெயர் சமூகத்தை வலுப்படுத்துதல், வெளிநாட்டு தொழில் வாய்ப்புடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடன் மேற்கொள்ளும் செயற்பாடுகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக பணியகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் என அனைத்தும் இதன் போது பாராட்டப்பட்டன.

Related Articles