லங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்தல்
இலங்கை அரசுக்கும் துருக்கி அரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம் 2008.12.02 கையொப்பமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் பணிச்சட்டத்தை மேலும் விருத்தி செய்வதற்கும், விமான சேவைகள் இணைப்புக்களை மீளாய்வு செய்வதற்கும், இரு தரப்பினர்களும் பின்னர் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது காணப்படுகின்ற விமான சேவைகள் ஒப்பந்தத்தின் 11 ஆம் பிரிவின் (கட்டண) திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
அதற்கான கலந்துரையாடல் குறிப்புக்கு இருதரப்பும் 2016.12.07 அன்று கையொப்பமிட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய, தற்போதுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தின் கட்டணச் சட்டகத்தை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தரநியமங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் தயாரிப்பதற்காக இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற விமான சேவைகள் ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


