மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட ஆரம்ப நிகழ்வு

மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட ஆரம்ப நிகழ்வு
  • :
மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்கான (EV Charging) உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கில், பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விசேட பணிமனை (Workshop )ஆரம்ப நிகழ்வில் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் கலந்துகொண்டார்.

 📌️ நாடு முழுவதும் போதுமான மின்சார வாகன மின்னேற்ற (Charging) வசதிகளை ஏற்படுத்துதல்.

📌️ மின் விநியோகக் கட்டமைப்பின் திறனை உறுதி செய்யும் வகையில், கவர்ச்சிகரமான கட்டண முறையொன்றை வடிவமைத்தல்.
📌️ மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் V2G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் மின் கட்டமைப்பை (Smart Grid) இலங்கைக்குள் உருவாக்குதல்.
📌️ 2030 ஆம் ஆண்டளவில் 05% மின்சார வாகனப் பயன்பாட்டை உறுதி செய்தல்.
📌️ நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி, வருடாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவை கணிசமாகக் குறைத்தல்.
ஆகிய ஐந்து முக்கிய கொள்கை இலக்குகளை அடைவதே இந்த தேசிய கொள்கையின் நோக்கமாகும்.
மின்சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை நிலையான ஆற்றல் அதிகார சபை, தேசிய கட்டமைப்பு முகாமையாளர் தனியார் நிறுவனம், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா தனியார் நிறுவனம் (EDL) மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக அவர்களின் தலைமையில் இன்று (17) கொழும்பு Courtyard by Marriott ஹோட்டலில் நடைபெற்ற இப்பணிமனையானது (Workshop) மின்சக்தி அமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் காலநிலை மற்றும் தூய்மையான காற்றுக்கான கூட்டணி (CCAC) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் ரசல் அபோன்சு , பொறியியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஜே. ஐ. டி. ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோட்டா (Azusa Kubota), அத்துடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை நிலையான ஆற்றல் அதிகார சபை, தேசிய கட்டமைப்பு முகாமையாளர் தனியார் நிறுவனம், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா தனியார் நிறுவனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தனியார் துறை பங்குதாரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Related Articles