பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது

பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது
  • :

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (17 ஜூன்) கொழும்பிலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இதன்போது, நலன்புரி விடயங்கள் , வீடமைப்பு, மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு மற்றும் சேவை தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், அவற்றிற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பொது தின நிகழ்ச்சி, பொதுமக்கள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படையினர், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தங்களது பிரச்சினைகள் மற்றும் குறைகளை நேரடியாக பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் முன்வைக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

பொது தின நிகழ்ச்சி, பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதற்கும், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதற்குமான பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles