இலங்கையர் தினமாக டிசம்பர் மாதம் 12,13, மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இத்திட்டம் கொழுப்பு மாநகர சபை மைதானத்தில் மற்றும் விகார மகாதேவி பூங்கா உட்பட அதனை அண்டிய பகுதிகளில் மற்றும் பிரதான வீதிகளை உட்படுத்தியதாக நான்கு வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்ம வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, கூடிய இலங்கையைக் புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்
இலங்கையர்கள் மத்தியில் இனம், மதம், கலாச்சார ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி மற்றும் அதிகரித்து எமது நாட்டை மேலும் உயர்ந்த இடத்தில் உயர்த்தி வைப்பதே இலங்கையர் தின தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்றும் இலங்கையர் தினமாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இந்த நிகழ்ச்சிகள் அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடாத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும், மேலும் ஒவ்வொரு பிராந்தியத்தின் கலாச்சார கூறுகள் மற்றும் உணவு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் மற்றும் விற்பனை, புதிய தயாரிப்பு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் இதற்காக ரூ. 300 மில்லியன் நிதி மதிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


