இலங்கையின் ரோமானிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்

இலங்கையின் ரோமானிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்
  • :

இலங்கையின் ரோமானிய தூதுவர், Steluta Arhire அவர்கள், தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு, கடந்த டிசம்பர் 23 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை மற்றும் ரோமானியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரதமர் தூதுவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அர்ப்பணிப்புடன்  உள்ளது என பிரதமர் இங்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக பிரதம செயலாளர் சாகரிக்கா போகஹவத்த மற்றும் வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இயக்குனர் ஜெனரல் ஷோபிணி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]