மக்களின் ஆரோக்கியத்தை அணுகுவதற்கான உரிமையை அடிப்படை மனித உரிமையாக புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரகடனப்படுத்தப்படும் என்றும், அது மீறப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாட முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக சேவை நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த நிகழ்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் மகாவலி கேந்திர மண்டபத்தில் இடம்பெற்றது.