இலத்திரனியல் ஒலிபரப்பாளர்களின் சங்கம் மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரனியல் ஒலிபரப்பாளர்களின் மாநாடு நாளை (25) கொழும்பில் நடாத்தப்படுபவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் என ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என் ஏ கே எல் விஜேநாயக்க தெரிவித்தார்.
இலத்திரனியல் ஒலிபரப்பாளர்களின் மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக கலந்துரையாடலில் நேற்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்,
இலத்திரனியல் ஒலிபரப்பில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய முன்னேற்றங்கள், புதிய ஊடகங்களின் வருகையுடன் ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் புதிய ஊடகக் கொள்கை போன்ற விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே இலங்கை எதிர்காலத்தில் இலத்திரனியல் ஊடகத்துறையில் கேந்திர ஸ்தானமாக உருவாக்கப்படுவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


