அடுத்த வருடம் யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரை மேற்கொள்ளப்படும் பாதை யாத்திரைக்கு முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமைத்துவத் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதன் தேவையை சுற்றாடல் அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க படபெந்தி, பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த நாட்களில், நடைபாதை மேற்கொள்ளப்படும் குமன மற்றும் யால தேசிய பூங்காக்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த திட்டத்தை தயாரிப்பதற்கான அடிப்படை தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம், அடுத்த ஆண்டு, அதாவது 2026 ஆம் ஆண்டில், முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமைத்துவத் திட்டத்துடன் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் நடைபாதையை மேற்கொள்வதாகும்.


