மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான கடும் மழை பெய்யலாம் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சிறிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி , மேல், சப்ரகமுவ வடமத்தி மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
இதேவேளை கடும் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


