பெரும்பாலான பிரதேங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட-மத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.


