2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது தற்போது (2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு) மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலை பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையில் கிழக்குக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான


