இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, கணிசமான அளவு நிதியை, இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (07) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வலில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், 69 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால ஆட்சேர்ப்பின் போது வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார். வைத்தியசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், சில வைத்தியசாலைகளில் மேலதிகமான பணியாளர்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது நிர்வகிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.