இந்தியக் கடன் உதவியின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட சூரிய மின்கலங்களை ஒரே இடத்தில் நிறுவி, அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு இணைத்து, மாத்தளை மாவட்டத்தில் உள்ள விகாரைகள் உள்ளிட்ட மதஸ்தலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசானாயக்க தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் ஒத்துழைப்புடன், இதற்கு ஏற்ற இடம் ஒன்று ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் விகாரைகளுக்கு இவ்வாறு இலவச மின்சாரம் வழங்கும் சாத்தியம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் விகாரைகளுக்கு மாற்று முறை ஒன்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.