இந்தியக் கடற்படை கப்பல் ‘சுகன்யா’ மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் கையளிப்பு

  • :

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya) கப்பல், 12 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் இன்று காலை திருகோணமலையில் உள்ள அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக, இந்தியக் கடற்படையினரால் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது. ​நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று ( 01) துறைமுகத்தில் நடைபெற்றது.

​இந்த 12 டன் நிவாரணப் பொருட்களில் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் (Life-saving Medicines) மற்றும் பல்வேறு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் (Essential Supplies) உள்ளடங்கி இருந்தன.

​இந்த உதவியை, இந்தியக் கடற்படை கட்டளை தளபதியும், ஐஎன்எஸ் சுகன்யா கப்பலின் கேப்டனுமான எஸ். கே. வர்மா, கிழக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதி றியர் அட்மிரல் ரவீந்திரா திசாராவிடம் கையளித்தார்.

​இந்தியக் கடற்படையின் நிவாரணப் பொருட்களை, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் வெளி விவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர ஆகியோர் கூட்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

​இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தலைவர் சாஸ்முரளி, மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles