IOM ன் காலநிலை இயக்கம் திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிப்பு

IOM ன் காலநிலை இயக்கம் திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிப்பு
  • :

ஐரோப்பிய (EU) ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் காலநிலை இயக்கம் திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சில் மார்ச் 24 நடந்த கூட்டத்தில் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்துக் கொண்டனர்.

இச்சசந்திப்பில் International Organization for Migration (IOM) அமைப்பின் இலங்கைத் தலைமை பிரதிநிதி Kristin Parco தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது, இரோம் பிரதிநிதிகள், காலநிலை இயக்கம் திட்டத்தின் நோக்கங்கள், மூலோபாய வடிவமைப்பு மற்றும் முக்கிய செயல் திட்டங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

இத்திட்டம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயக்க சவால்களை சமாளிக்க தேசிய திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் கொள்கை ஒருங்கிணைப்பு, நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் முக்கிய தொழில்நுட்ப ஆதரவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதன போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், காலநிலை தொடர்பான இயக்கம் தொடர்பில் நன்கு திட்டமிட்டப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உருவாகி வரும் சவால்களைச் சமாளிக்க துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் தொடர்ச்சியான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles