இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் கோதுமையின் விலைகளை புதுவருட காலம் நிறைவடையும் வரை எவ்விதத்திலும் அதிகரிப்பதில்லை தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை சங்கம் உத்தரவாதம்
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவிலை மற்றும் கோதுமை விலை எக்காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படமாட்டாது என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை சங்கம் நேற்று (23) வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு உத்தரவாதம் அளித்தனர்.
தற்போது காணப்படும் யுத்த நிலமை காரணமாக விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தை பேணுதல் தொடர்பான கலந்துரையாடலுக்காக பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை இறக்குமதி கம்பனிகள்
(பிறீமா மற்றும் செரெண்டிப் நேற்று (23) வர்த்தகம், வாணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் ஒன்று கூடிய போதே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது.
எரிப்பொருள் விலை அதிகரிப்பு மற்றும் டாலரின் பெறுமதி தமது உற்பத்திகளின் செலவில் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தினாலும் இந்த அசாதாரண நிலைமையில் மக்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு ஏதோ ஒரு நிவாரணத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்தனர்.
அதன் காரணமாக மேலும் மூன்று மாத காலத்திற்குப் போதுமான பால் மா மற்றும் கோதுமை விநியோகிப்பது தொடர்பாக உத்தரவாதமளிக்க முடியும் என்றும், எதிர்வரும் புதுவருட காலம் நிறைவடையும் வரை எவ்விதத்திலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் கோதுமை கம்பெனிகள் அமைச்சரிடம் உறுதிப்படுத்தின.
அவ்வாறே எரிபொருள் கோட்டா காரணமாக பகிர்ந்தளிப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
உணவு விநியோகத்துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவைகள் வழங்குநர்களின் எரிபொருள் தேவையை அடையாளம் காண்பதற்கு மற்றும் அத்துறை திட்டமிடலை ஒழுங்கு படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தரவுகளை சேகரிக்கும் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு இதன் போது அமைச்சர் இந்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.


