கரையோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

கரையோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
  • :

இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் (SLCG) பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (23 மார்ச்) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

ரியர் அட்மிரல் ஜோசப், SLCG யின் பணிப்பாளர் நாயகமாக நியமணம் பெற்றதன் பின் பாதுகாப்பு செயலாளரை உத்தியோக பூர்வமாக இன்று சந்தித்தார்.

அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், நாட்டின் கரையோர நீர்ப்பரப்புகளை பாதுகாத்தல், கடலில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடுகளை எதிர்கொள்ளல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதில் இலங்கை கரையோர பாதுகாப்பு படை வகிக்கும் முக்கிய பங்கினை வலியுறுத்தினார்

Related Articles