இரத்தினபுரி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (26) இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.


