"தண்ணீர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் நமது ஆறுகளை நஞ்சாக்குகிறோம்? காடுகள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் அவற்றை வெட்டுகிறோம்? மண் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் அதன் உயிரைப் பறிக்கிறோம்? நாம் இயற்கையைச் சார்ந்திருக்கிறோம், ஆனால் இயற்கை நம்மைச் சார்ந்திருப்பதில்லை.
அப்படியென்றால், நமது சிறந்த கூட்டாளியான இயற்கையை ஏன் அழிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறோம்?"
இலங்கை மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனசாட்சியிலிருந்து எழும் இந்தக் கடுமையான கேள்விக்கு நிலையான பதில்களை வழங்குவதன் மூலம், நாட்டின் சிதைந்து வரும் சூழலியல் சமநிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, புதிய அரசாங்கம் "வனஸ்பதி" என்ற ஒரு தனித்துவமான தேசியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான இந்த மாபெரும் போராட்டத்திற்குப் பெரும் வலிமையையும் ஆதரவையும் அளிக்கிறது.
நீண்ட காலமாக கட்டுப்பாடற்ற மனித நடவடிக்கைகளால் சீரழிந்து வரும் ஆறுகள், காடுகள் மற்றும் மண்ணைப் பாதுகாக்கும் பொருட்டு, "வனஸ்பதி" திட்டம், காடழிப்புக்கு எதிரான "வனஸ்பதி" பசுமைச் சுவர் சட்டத்தை செயல்படுத்தும் அதே வேளையில், நாடு முழுவதும் சீரழிந்த வனப்பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை இயற்கைக் காடுகளாக மீட்டெடுப்பதற்காக அறிவியல் ரீதியான மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதன் கீழ், நாட்டிற்குச் சொந்தமானதும், நீண்ட காலம் நீரைத் தேக்கி வைக்கக்கூடியதுமான இலட்சக்கணக்கான "மகா விருட்சம்" (வனஸ்பதி மரங்கள்) ஆற்றுப் படுகைகளிலும் நீர்நிலைப் பகுதிகளிலும் நடப்பட்டு வருகின்றன.
"வனஸ்பதி" திட்டத்தின் கீழ் நீர் ஆதாரங்களையும் ஆறுகளையும் பாதுகாத்தல்
"வனஸ்பதி" திட்டத்தின் மூலம் ஆற்றங்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சூழலியல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரை அரிப்பைத் தடுக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் நீர் தேக்கத் தாவர அமைப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.
உயிர்ப்புள்ள மண்,
மண்ணில் உள்ள உயிர்களை அழிக்கும் இரசாயனங்களின் அதீத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, வனம் சார்ந்த மண்ணின் வளத்தையும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாப்பதற்காக 'வனஸ்பதி' திட்டம் விசேட ஆராய்ச்சிகளும் நடைமுறைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


