வரக்காபொல உப வீதியின் நிர்மாணப் பணிகளில் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

வரக்காபொல உப வீதியின் நிர்மாணப் பணிகளில் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்
  • :

தேசிய பெருந்தெருக்களை விரிவாக்கம் செய்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி வரக்காபொல உப வீதியின் (010000 கிலோமீற்றர் தொடக்கம் 210320 வரை) நிர்மாணப் பணிகளில் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு தகைமையுடைய ஒப்பந்தக்காரர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேசிய போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், ஆறு (06) விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Maga Engineering (Pvt) Ltd இற்கு 4.99 பில்லியன் ரூபாய் தொகைக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles