2006 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையிலுள்ள கால்நடை வளங்கள் கொள்கை, உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் இடம்பெற்றுள்ள சமூக மற்றும் பொருளாதார நிலைமாற்றங்களால் உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை வளங்கள் துறையின் அபிவிருத்தி தொடர்பாக மேலெழுந்துள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு காலத்தோடு தழுவியதாக மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, உள்நாட்டு நிபுணத்துவர்களின் மதியுரைகள் மற்றும் அறிவைப் பெற்றுக்கொண்டு தனியார் துறையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி, சந்தைப்படுத்தலை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையான உற்பத்தி, பேண்தகு மற்றும் சுற்றாடல் நேய அபிவிருத்தி, சிறு விவசாயிகள் மற்றும் கிராமிய வாழ்வாதாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் அடிப்படையிலான அபிவிருத்தி போன்ற துறைகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கால்நடை வளங்கள் கொள்கையை அமுல்படுத்துவதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


