முன் பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
'வளரும் குழந்தை உலகிற்கு - சூரியனைப் போன்ற ஓர் அழகான குடும்பம்' என்ற கருப்பொருளின் கீழ், இந்த தேசிய வாரம் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உடல், உளவியல்-சமூக மற்றும் அறிவுசார் அபிவிருத்தியுடன் கூடிய ஒரு இலங்கை சி பருவ தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி. சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
நேற்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதைத் தெரிவித்தார்.


